செய்திகள்
கோப்புப்படம்

பீகார் சட்டசபை தேர்தல் : வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

Published On 2020-10-12 00:18 GMT   |   Update On 2020-10-12 00:18 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.
பாட்னா:

பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிறது.

இந்தத் தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தநிலையில் 2-ம் கட்ட தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.

மாநில மந்திரி நந்த் கிஷோர் யாதவ், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்நாத் மிஸ்ராவின் மகன் நிதிஷ் மிஸ்ரா ஆகியோரின் பெயர்களும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
Tags:    

Similar News