உத்தர பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
பதிவு: அக்டோபர் 10, 2020 09:57
விபத்தில் சிக்கிய பேருந்து
அலிகார்:
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று அதிகாலையில் அலிகார் மாவட்டம் டப்பால் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது கவலையையும் இரங்கலையும் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :