செய்திகள் (Tamil News)
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்வு

Published On 2020-10-09 02:28 GMT   |   Update On 2020-10-09 02:28 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 10 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 356 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் வரை 9,574 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 101 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9,675 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக பாகல்கோட்டையில் 98 பேர், பல்லாரியில் 248 பேர், பெலகாவியில் 185 பேர், பெங்களூரு புறநகரில் 368 பேர், பெங்களூரு நகரில் 5,121 பேர், பீதரில் 27 பேர், சாம்ராஜ்நகரில் 68 பேர், சிக்பள்ளாப்பூரில் 100 பேர், சிக்கமகளூருவில் 142 பேர், சித்ரதுர்காவில் 215 பேர், தட்சிண கன்னடாவில் 296 பேர், தாவணகெரேயில் 238 பேர், தார்வாரில் 121 பேர், கதக்கில் 42 பேர், ஹாசனில் 441 பேர், ஹாவேரியில் 108 பேர், கலபுரகியில் 128 பேர், குடகில் 94 பேர், கோலாரில் 129 பேர், கொப்பலில் 97 பேர், மண்டியாவில் 206 பேர், மைசூருவில் 642 பேர், ராய்ச்சூரில் 111 பேர், ராமநகரில் 91 பேர், சிவமொக்காவில் 250 பேர், துமகூருவில் 509 பேர், உடுப்பியில் 239 பேர், உத்தர கன்னடாவில் 213 பேர், விஜயாப்புராவில் 110 பேர், யாதகிரியில் 67 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு பெங்களூருவில் 43 பேர், மைசூருவில் 12 பேர், தட்சிண கன்னடாவில் 6 பேர், கலபுரகி, கோலார், துமகூருவில் தலா 5 பேர், பாகல்கோட்டை, பல்லாரியில் தலா 3 பேர், தார்வார், ஹாசன், மண்டியா, சிவமொக்கா, யாதகிரியில் தலா 2 பேரும், விஜயாப்புரா, உடுப்பி, ராமநகர், ராய்ச்சூர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சிக்கமகளூருவில் தலா ஒருவர் என மொத்தம் 101 பேர் நேற்று ஒரேநாளில் பலியாகி உள்ளனர். நேற்று 9,613 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 519 ஆக உயர்ந்து உள்ளது. 1 லட்சத்து 17 ஆயிரத்து 143 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1 லட்சத்து 5 ஆயிரத்து 248 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 853 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News