செய்திகள்
உ.பி.யில் நடந்த போராட்டம் - கோப்புப்படம்

உ.பி.யில் கூட்டு பலாத்காரத்தால் பலியான இளம்பெண்ணின் குடும்பத்துக்கு வீட்டு மனை - மாநில அரசு வழங்குகிறது

Published On 2020-10-02 22:58 GMT   |   Update On 2020-10-02 22:58 GMT
கூட்டு பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு வீட்டு மனை கொடுப்பதற்கும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண்ணும், பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண்ணும் கும்பல் கற்பழிப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த கற்பழிப்பு சம்பவங்களை தொடர்ந்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், பல்ராம்பூர் கூட்டு பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு வீட்டு மனை கொடுப்பதற்கும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரபிரதேச அரசு முடிவு செய்து உள்ளதாக உள்ளூர் எம்.எல்.ஏ. பால்துராம் தெரிவித்தார்.
Tags:    

Similar News