செய்திகள்
ஸ்ரீமந்த் பட்டீல்

கர்நாடக மந்திரிக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-02 19:18 GMT   |   Update On 2020-10-02 19:18 GMT
கர்நாடக மந்திரி சபையில் ஜவுளித் துறை மற்றும் சமூகநலத்துறை மந்திரி ஸ்ரீமந்த் பட்டீலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது
பெங்களூரு:

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரி சபையில் ஜவுளித் துறை மற்றும் சமூகநலத்துறை மந்திரியாக இருப்பவர் ஸ்ரீமந்த் பட்டீல் (வயது 65). இவர் பெலகாவி மாவட்டம் காக்வாட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதன் அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும் டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என 90-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News