செய்திகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் துபாய் செல்லும் பயணிகளின் முக்கிய கவனத்திற்கு

Published On 2020-09-29 17:14 GMT   |   Update On 2020-09-29 17:14 GMT
ஜெய்ப்பூர், கேரளா, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்த முடிவுகள் நிராகரிக்க வேண்டும் என கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானத்தை இந்தியா வந்தே பாரத் என்ற பெயரில் இயக்கியது. பின்னர் சில நாடுகளுடன் தற்காலிகமாக போக்குவரத்தை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கும் பயணிக்கும் விமான பயணிகள் கட்டாயம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, சான்றிதழ் கொண்டு செல்வது கட்டாயம்.

இந்நிலையில் துபாயில் உள்ள கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்ப்பூர், கேரளா, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள நான்கு ஆய்வகங்களில் செய்த பரிசோதனை அறிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிராகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News