செய்திகள்
மைசூரு தசரா விழா(பழைய படம்)

20 நாட்களே உள்ள நிலையில் மைசூரு தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2020-09-28 03:13 GMT   |   Update On 2020-09-28 03:13 GMT
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழா தொடங்க 20 நாட்களே இருப்பதால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மைசூரு :

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கொரோனாவால் இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. மேலும் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்திலேயே ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தசரா விழா தொடங்க 20 நாட்களே இருப்பதால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதாவது மைசூரு நகரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், முக்கிய தலைவர்களின் சிலைகள், சர்க்கிள்கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் மைசூரு அரண்மனையை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது. அத்துடன் மைசூரு அரண்மனையை சுற்றிய சாலைகள், பஸ் நிலையம், விமான நிலையம், ரெயில் நிலைய ரோடுகள் உள்பட சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அத்துடன் அரண்மனையில் வர்ணம் தீட்டும் பணியும் தொடங்கியுள்ளது. அதுபோல் பாரம்பரிய கட்டிடங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பொழிவாக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே வருகிற 1-ந்ே-தி தேதி தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அபிமன்யு, விக்ரம், விஜயா உள்ளிட்ட 5 யானைகளும் நாகரஒலே முகாம்களில் இருந்து மைசூருக்கு அழைத்து வரப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர், தசரா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News