செய்திகள்
சிரோமணி அகாலி தளம் எம்பி நரேஷ் குஜ்ரால்

வேளாண் மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்- சிரோமணி அகாலி தளம் வலியுறுத்தல்

Published On 2020-09-20 07:32 GMT   |   Update On 2020-09-20 07:32 GMT
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் மீது காரசாரமான விவாதம் நடைபெறுகிறது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் பேசும்போது, ‘இந்த மசோதாக்களை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும், இதனால் அனைவரின் கருத்துக்களையும் கேட்க முடியும். பஞ்சாப் விவசாயிகள் பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்’ என்றார். 

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பேசுகையில், வேளாண் சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு, நாட்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றோ, விவசாயிகள் தற்கொலை செய்ய மாட்டார்கள் என்றோ அரசாங்கத்தால் உத்தரவாதம் தர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். இது ஒரு வதந்தி. எனவே, ஒரு வதந்தியின் அடிப்படையில் மத்திய மந்திரி பதவி விலகினாரா? என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Tags:    

Similar News