செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பொருளாதார மீட்புக்கு காரணமாக அமைய போவது வங்கிகள்தான் - நிர்மலா சீதாராமன் புகழாரம்

Published On 2020-09-10 00:04 GMT   |   Update On 2020-09-10 00:04 GMT
பொருளாதார மீட்புக்கு காரணமாக அமைய போவதும், வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை அறிந்ததும் வங்கிகள்தான் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பொதுத்துறை வங்கிகள் வீடு தேடி சேவை அளிக்கும் திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இந்த திட்டப்படி, கால்சென்டர்கள், செயலிகள், இணையதளங்கள் மூலம் கேட்கப்படும் கோரிக்கைகள், வங்கி முகவர்கள் மூலமாக வீட்டுக்கே வந்து அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தில் வங்கிகள் ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது. பொருளாதார மீட்புக்கு காரணமாக அமைய போவதும், வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை அறிந்ததும் வங்கிகள்தான். ஊரடங்குக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ள வர்த்தக நடவடிக்கைகள், புத்துயிர் பெறுவதற்கு வங்கி சேவைகள் உதவும்.

மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் போன்ற இடங்களிலும் வங்கிகள் தங்கள் சேவையை அளிக்க வேண்டும். ஸ்மார்ட் போன்கள் மூலமாக மட்டுமின்றி, சாதாரண போன்கள் மூலமாகவும் வங்கிகள் சேவை அளித்தால், அது இன்னும் சிறப்பாக இருக்கும். அரசு திட்டங்களை வங்கி ஊழியர்கள் அறிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை அளிக்க முடியும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
Tags:    

Similar News