செய்திகள்
பிளாஸ்மா சிகிச்சை முறை

பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா இறப்புகளை குறைக்காது -ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

Published On 2020-09-09 07:33 GMT   |   Update On 2020-09-09 07:33 GMT
கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை உதவாது என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளைக் குறைப்பதற்கு பிளாஸ்மா (சிபி) சிகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆராய்ந்து அதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வின் படி, கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை பிளாஸ்மா சிகிச்சை குறைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தீவிரமாக நோய் பாதிப்பு இருக்கும்போது உயிரிழப்பை குறைக்கவோ, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவோ இந்த சிகிச்சை முறை உதவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. 

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பெரிய அளவில் ஊக்குவிக்கப்படுகிறது. பல மாநிலங்களும் மருத்துவமனைகளும் இந்த சிகிச்சையை ஆதரிப்பது மட்டுமல்லாமல் பிளாஸ்மா வங்கிகளையும் அமைத்துள்ளன. உதாரணமாக மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ஹரியானாவில் லேசான நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் இந்த சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு, தற்போதுள்ள சிகிச்சை திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Tags:    

Similar News