செய்திகள்
வெப்பநிலை கண்டறியும் சாதனம்

அந்த சோதனை உடலில் பேராபத்தை ஏற்படுத்துவதாக கூறி வைரலாகும் தகவல்

Published On 2020-09-04 04:10 GMT   |   Update On 2020-09-04 04:10 GMT
அந்த சோதனை செய்வதால் உடலில் பேராபத்து ஏற்படுத்துவதாக கூறி பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மனிதர்களின் உடல் வெப்பநிலையை இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர் கொண்டு டிராக் செய்தால் மனித மூளையில் உள்ள பினியல் சுரப்பி பாதிக்கப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நர்ஸ் ஒருவர் இதுபற்றி எழுதிய பதிவு பேஸ்புக்கில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இவரது பதிவில் தெர்மோமீட்டர் துப்பாக்கிகளின் பயன்பாடு ஏற்படுத்தும் அபாயம் பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.



மருத்துவ துறையை சேர்ந்தவராக, பினியல் சுரப்பி இருக்கும் பகுதியில் நேரடியாக இன்ஃப்ராரெட் கதிர்களை பீய்ச்சியடிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனினும், தற்போதைய சூழலில் பலர் இதனை எதிர்கொண்டுள்ளனர். இது அவர்களின் உடலில் தற்போதும், எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், வெப்பநிலையை கண்டறிவதால் மனித மூளையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரியவந்துள்ளது. வெப்பநிலையை துப்பாக்கி போன்று இருக்கும் சாதனத்தை கொண்டு டிராக் செய்யும் போது இன்ஃப்ராரெட் கதிர்கள் வெளிப்படாது என உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News