செய்திகள்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கர்நாடகாவில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.2.95 கோடி பறிமுதல்

Published On 2020-09-02 06:36 GMT   |   Update On 2020-09-02 06:36 GMT
கர்நாடக மாநிலம் கோலார் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2.95 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சீனிவாசபுராவில் உள்ள ரோஜனஹள்ளி சுங்கச்சாவடியில் போலீசார் இன்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.2.95 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பணம் குறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப்  பேசி உள்ளனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து காரில் இருந்த பணம் ரூ.2.95 கோடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த 2 பேரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோலார் எஸ்.பி. கார்த்திக் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
Tags:    

Similar News