செய்திகள்
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

Published On 2020-08-27 03:35 GMT   |   Update On 2020-08-27 03:35 GMT
மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி: 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கி உள்ளதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனால் மாநில அரசுகளுக்கு கடும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. இதனைத்தொடர்ந்து மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி  மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில நிதி-மந்திரிகளுடன், நிதித்துறை இணை-மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்து கொள்கிறார்.

மேலும் இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News