செய்திகள்
திரிவேந்திர சிங் ராவத்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி தனிமைப்படுத்திக்கொண்டார்

Published On 2020-08-26 20:17 GMT   |   Update On 2020-08-26 20:17 GMT
உத்தரகாண்ட் மாநில பாரதீய ஜனதா கட்சி முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத் தன்னை 3 நாட்கள் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநில பாரதீய ஜனதா கட்சி முதல்-மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் (வயது 59) உள்ளார். இவரது சிறப்பு பணி அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதையடுத்து முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத் தன்னை 3 நாட்கள் இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரும், அவரது குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு தொற்று இல்லை என வந்துள்ளது. இதை அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் அவர், “கடவுள் கருணையாலும், உங்கள் வாழ்த்துகளாலும் கொரோனா பரிசோதனை அறிக்கையில் தொற்று இல்லை என வந்துள்ளது. இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாட்கள் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். இல்லத்தில் இருந்து தொலைபேசி வழியாகவும், ஆன்லைன் வழியாகவும் எனது பணி தொடரும்” என கூறி உள்ளார்.

இதே போன்று அவரது அலுவலக ஊழியர், பாதுகாப்பு அதிகாரியும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை. 
Tags:    

Similar News