செய்திகள்
சர்தார் படேல் சிலை

குஜராத் சர்தார் படேல் சிலைக்கு ஆகஸ்டு 25 முதல் சிஐஎஸ்எப் பாதுகாப்பு

Published On 2020-08-19 19:55 GMT   |   Update On 2020-08-19 19:55 GMT
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேல் சிலைக்கு மத்திய கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா காலனி என்ற இடத்தில் நர்மதை ஆற்றின் கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இச்சிலை உலகிலேயே மிகப்பெரியது என்ற பெருமை பெற்றுள்ளது.

இச்சிலைக்கு மத்திய கம்பெனிகள் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், சர்தார் படேல் சிலையை பார்வையிட தற்போது  பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சர்தார் படேல் சிலைக்கு ஆகஸ்டு 25-ம் தேதி முதல் மத்திய கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் மத்திய கம்பெனிகள் பாதுகாப்பு படை டி.ஜி., ராஜேஷ் ரஞ்சனுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, முதல்கட்டமாக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் 272 மத்திய கம்பெனி படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Tags:    

Similar News