செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் பதவியில் அதிக நாட்கள்: வாஜ்பாயை முந்தினார் மோடி

Published On 2020-08-13 15:31 GMT   |   Update On 2020-08-13 15:31 GMT
காங்கிரஸ் கட்சியை அல்லாத ஒருவர் பிரதமர் பதவியை அதிக நாள் வகித்தவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்தியாவில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மோடி மே 26-ந்தேதி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா தனி மெஜாரிட்டிக்கான இடத்தை பிடித்தது.

இதன்மூலம் தொடர்நது 2-வது முறையாக மோடி பிரதமாக பதவி ஏற்றுக் கொண்டார். இன்றுடன் மோடி பிரதமராக பதவி ஏற்று ஆறு வருடங்கள் 79 நாட்கள் ஆகிறது. இதன்மூலம் காங்கிரஸ் அல்லாதவர் நீண்ட நாட்களாக பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

இதற்கு முன் வாஜ்பாய் 2,268 நாட்கள் பிரதமாக இருந்ததுதான் அதிக நாட்களாக இருந்தது. தற்போது மோடி அதை முந்தியுள்ளார்.

மேலும், அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஜவர்ஹலால் நேரு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதியில் இருந்து 1964-ம் ஆண்டு மே 27-ந்தேதி அவர் இறக்கும் வரை 16 வருடங்கள் 286 நாட்கள் பிரதமாக இருந்தார்.

அதன்பின் இந்திரா காந்தி 11 வருடம் 59 நாட்கள் பிரதமராக இருந்துள்ளார். மன்மோகன் சிங் 10 வருடங்கள், நான்கு நாட்கள் பிரதமராக இருந்துள்ளார்.
Tags:    

Similar News