செய்திகள்
பீகார் வெள்ளம்

பீகார் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

Published On 2020-08-12 00:21 GMT   |   Update On 2020-08-12 00:21 GMT
பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். 
 
இதற்கிடையே, பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 16 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு அடைந்த தர்பங்கா பகுதியில் 10 பேரும், முசாபர்பூரில் 6 பேரும், மேற்கு சம்பாரன் பகுதியில் 4 பேர், சரண் மற்றும் சிவான் பகுதிகளில் தலா 2 பேர் என மொத்தம் 24 பேர் பலியாகினர். மேலும் வெள்ளத்தில் சிக்கி 66 விலங்குகளும் இறந்துள்ளன என தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது நினைவிருக்கலாம். 
Tags:    

Similar News