செய்திகள்
விஜயவாடா தீ விபத்து

விஜயவாடா தீ விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Published On 2020-08-09 05:35 GMT   |   Update On 2020-08-09 05:35 GMT
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழலில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து அங்கிருக்கும் ஓட்டல்கள், மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.  இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.   5 மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.  ஓட்டலில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சொகுசு ஓட்டலில் 3வது மாடியில் கொரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த தீ  விபத்தில் நோயாளிகளை மீட்கும் பணியில் காவல்துறை, மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரதம் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News