செய்திகள்
கேரளா விமான விபத்து

கேரள விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்- மலப்புரம் மாவட்ட ஆட்சியர்

Published On 2020-08-08 09:42 GMT   |   Update On 2020-08-08 09:42 GMT
கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலப்புரம்:

துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது.

மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் 3 பேர் பயணித்தனர். முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு ஷாலா ஷாஜகான் ஆகிய 3 பேர் தமிழர்கள் தான் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

மூவருமே சுற்றுலாவுக்காக துபாய் சென்றபோது ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்ற மகிழ்ச்சியான தகவலை மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News