செய்திகள்
நாடு திரும்பும் இந்தியர்கள்

வந்தே பாரத் திட்டம் மூலம் 9.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்- வெளியுறவுத்துறை

Published On 2020-08-07 03:03 GMT   |   Update On 2020-08-07 03:03 GMT
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 9.5 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதையடுத்து, பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 9.5 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது:

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர நான்கு கட்டங்களில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியுள்ளோம். 746 முறை இயக்கி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் வாயிலாக இதுவரை 9.5 லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஐந்தாம் கட்டத்தினை துவக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News