செய்திகள்
மோடி - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா கனமழை: முதல்மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2020-08-05 21:32 GMT   |   Update On 2020-08-05 21:32 GMT
மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை தொடர்பாக மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மும்பை:

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையில் மும்பை நகரமே மூழ்கியது. 

சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் சாய்ந்தன. பல வீடுகள் கனமழையால் இடிந்துள்ளது. 
மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் பெய்துவரும் கனமழை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது கனமழை,வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மும்பையின் தற்போதைய நிலவரம் குறித்தும் உத்தவ் தாக்கரேவிடம் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

பின்னர் கனமழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மும்பைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என தாக்கரேவிடம் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து, பிரதமரின் ஆதரவுக்கு மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Tags:    

Similar News