செய்திகள்
பிரியங்கா காந்தி

ராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி

Published On 2020-08-04 12:49 GMT   |   Update On 2020-08-04 12:49 GMT
பகவான் ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர். அவர் எல்லோருடைய நலனையும் விரும்புகிறார் என பிரயங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தில் நாளை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி பகவான் ராமர் குறித்து கூறுகையில் ‘‘ராமாயணம் உலக நாகரிகத்திலும் இந்திய துணைக் கண்டத்திலும் அழியாத அடையாளத்தை வைத்துள்ளது. கடவுள் ராமரின் பாத்திரம் இந்திய துணைக் கண்டத்திற்கு உதவியது. பகவான் ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர். அவர் எல்லோருடைய நலனையும் விரும்புகிறார். 

மேலும், டுவிட்டரில் பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்டு 5-ம்தேதி (நாளை) நடக்கிறது. ராமரின் ஆசீர்வாதத்தோடு இந்த விழாவானது, தேசிய ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கம் அடையாளமாக மாறும் என நம்புகிறேன்.

கடவுள் ராமர், சீதை ராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நமது கலாசாரம் மற்றும் மத நினைவுகளில் ஔர்கிறது. மதம், கொள்கை, கடமை, தியாகம், அன்பு, வீரம் மற்றும் சேவை ஆகியவற்றால் ஈர்க்கட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News