செய்திகள்
24 கிலோ வெள்ளி செங்கல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கிய ஜெயின் சமூகத்தினர்

Published On 2020-08-03 18:07 GMT   |   Update On 2020-08-03 18:07 GMT
குஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.
ஆமதாபாத்:

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற புதன்கிழமை (ஆகஸ்ட் 5-ம்தேதி) அயோத்தியில் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி, முதலாவது வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார்.  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த அறக்கட்டளைக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் ஜெயின் சமூக மக்கள் இணைந்து, அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிக்காக 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.

இதனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூக சாமியார்கள் வழங்கியுள்ளனர்.  இதுபற்றி ஜெயின் சமூக சாமியார் ஒருவர் கூறும்பொழுது, அயோத்தியாவில் பெரிய அளவிலான ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, நாடு முழுவதுமுள்ள மக்களுடன் இணைந்து ஜெயின் சமூகத்தினரும் உற்சாகமடைந்து உள்ளனர்.

வரும் 5ந்தேதி, எங்களுடைய சமூகத்தினர் ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஓதுவோம்.  கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைய வேண்டும் என வேண்டி கொள்வோம்.  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், ஒட்டு மொத்த சமூகமும் தங்களது வீடுகளில் விளக்குகளை ஏற்றுவார்கள் என கூறினார்.

Tags:    

Similar News