செய்திகள்
நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் (கோப்புப்படம்)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா: 1,206 பேர் டிஸ்சார்ஜ்

Published On 2020-07-31 12:29 GMT   |   Update On 2020-07-31 12:29 GMT
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,195 பாதிப்புக்குள்ளான நிலையில், 1,206 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஜூலை மாதம் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக டெல்லி மாநில அரசு அச்சம் தெரிவித்தது.

இதனால் மத்திய அரசு மாநில அரசுக்கு பல உதவிகளை செய்தது. குறிப்பாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வலியுறுத்தியது. விரைவாக நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்காக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொண்டது.

இதனால் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது. இன்று மாலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,206 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் கொரோனாவால் மொத்தம் 1,35,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,20,930 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 27 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 3963 ஆக உயர்ந்துள்ளது.

5,629 RT-PCR/CBNAAT/TrueNat பரிசோதனைகளும், 13,462 ரேபிட் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News