செய்திகள்
வைரல் படம்

காதி இந்தியா ரூ. 999 விலையில் மூன்று முகக்கவசங்களை விற்பனை செய்வதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-07-28 04:03 GMT   |   Update On 2020-07-28 04:03 GMT
காதி இந்தியா மூன்று முகக்கவசங்களை ரூ. 999 விலையில் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது.


காதி இந்தியா மூன்று முகக்கவசங்களை ரூ. 999 விலையில் விற்பனை செய்வதாக கூறும் விளம்பர படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளம்பர படத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம், மேக் இன் இந்தியா லோகோ மற்றும் காதி இந்தியா டிரேட்மார்க் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளது.

முகக்கவசங்களின் அதிக விலை மட்டுமின்றி மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மாற்றாக பிரதமர் மோடி புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கு அரசாங்கத்தை நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 



இந்த முகக்கவசங்களை விற்பனை செய்யும் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதோடு, அரசு நிறுவனமாக வெளிப்படுத்திக் கொள்ள மேக் இன் இந்தியா, வோக்கல் ஃபார் லோக்கல் மற்றும் சக்ரா சின்னங்களை பயன்படுத்தி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் காதி இந்தியா தனது முகக்கசவங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் வாரிம் வைரலாகும் பதிவுகளில் உள்ள முகக்கவசங்களை காதி இந்திய விற்பனை செய்வதில்லை என தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த விற்பனையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News