செய்திகள்
உத்தவ் தாக்கரே, அலோக் குமார்

பூமி பூஜையை காணொலி மூலம் நடத்த முடியாது: உத்தவ் தாக்கரே கோரிக்கை நிராகரிப்பு

Published On 2020-07-28 03:42 GMT   |   Update On 2020-07-28 03:42 GMT
உத்தவ் தாக்கரே யோசனை, அவரது கண்மூடித்தனமான எதிர்ப்பை காட்டுகிறது. மக்கள் ஆரோக்கியம் என்ற பெயரில் உத்தவ் தாக்கரே காட்டும் அக்கறை, வெறும் நடிப்புதான் என்று விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.
அயோத்தி :

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொலி காட்சி மூலம் நடத்துமாறு மராட்டிய மாநில முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்து இருந்தார். ஆனால், அதை விசுவ இந்து பரிஷத் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து அதன் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே யோசனை, அவரது கண்மூடித்தனமான எதிர்ப்பை காட்டுகிறது. ஒரு காலத்தில் பால்தாக்கரே தலைமையில் இயங்கிய இந்துத்துவா கட்சியின் வீழ்ச்சி, அனுதாபத்தை வரவழைக்கிறது. பூமி பூஜை என்பது புனிதமான, அவசியமான சடங்கு. கட்டுமான பணியை தொடங்கும் முன்பு, பூமியை தோண்டுவதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும் பூமித்தாயின் அனுமதி, ஆசி வேண்டி வழிபடுவதே இதன் நோக்கம்.

இதை காணொலி காட்சி மூலம் நடத்த முடியாது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் 200 பேர் மட்டுமே பங்கேற்க நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். எனவே, மக்கள் ஆரோக்கியம் என்ற பெயரில் உத்தவ் தாக்கரே காட்டும் அக்கறை, வெறும் நடிப்புதான்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News