செய்திகள்
ஆன்மீக தலைவர் மொராரி பாபு

அயோத்தி ராமர் கோவில் கட்ட 5 கோடி ரூபாய் நன்கொடை- ஆன்மீக தலைவர் மொராரி பாபு அறிவிப்பு

Published On 2020-07-28 03:26 GMT   |   Update On 2020-07-28 03:26 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர்.
அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க, 15 உறுப்பினர்களைக்கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. 

கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். அவ்வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஆன்மீக தலைவர் மொராரி பாபு தனது வியாஸ்பீடம் சார்பில் 5 கோடி ரூபாய் நன்கொடையை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News