செய்திகள்
ஏர் மார்ஷல் விவேக் ராம்

விமானப்படையின் மேற்கு படைப்பிரிவு தளபதியாக விவேக் ராம் நியமனம்

Published On 2020-07-24 11:48 GMT   |   Update On 2020-07-24 11:48 GMT
இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவு தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி ஆகஸ்ட் 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆகஸ்ட் 1ம் தேதி மேற்கு படைபிரிவு தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

2001ம் ஆண்டு முதல் விமானப்படையின் பல்வேறு நிலைகளில் பதவி வகித்தவர் விவேக் ராம் சவுத்ரி. 2019ம் ஆண்டில் இருந்து ஷில்லாங்கில் உள்ள கிழக்கு கமாண்டிங் படைப்பிரிவில் சீனியர் ஏர் ஸ்டாப் ஆபீசராக பணியாற்றி வரும் அவர், தற்போது மேற்கு படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
Tags:    

Similar News