செய்திகள்
ஏர் இந்தியா

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மாதாந்திர படிகள் 50 சதவீதம் குறைப்பு

Published On 2020-07-23 10:28 GMT   |   Update On 2020-07-23 10:28 GMT
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊழியர்களின் மாதாந்திர படிகளை 50 சதவீதம் குறைத்து உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் விமான போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம், சம்பளமில்லா விடுப்பு, பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் ஊழியர்களின் மாதாந்திர படிகளை குறைத்து உள்ளது. அதன்படி அனைத்து பொது வகை அதிகாரிகளுக்கும் 50 சதவீதம் வரையும், பொது வகை ஊழியர்கள் மற்றும் ஆப்ரேட்டர்களுக்கு 30 சதவீதம் வரையும் படிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக கேபின் பணியாளர்களுக்கு சோதனை படிகள், பறக்கும் படிகள் (பயணம்), உடனடி திரும்புதல் படி போன்றவை குறைக்கப்படுகின்றன. இதைப்போல விமானிகளுக்கும் பல்வேறு வகையான படிக்குறைப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனினும் அடிப்படை சம்பளம் மற்றும் தொழில்துறை அகவிலைப்படி தொடர்பான இதர படிகள் மற்றும் வீட்டு வாடகை எதுவும் குறைக்கப்படவில்லை. இதைப்போல ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் எவ்வித படிக்குறைப்பும் இல்லை. இந்த நடவடிக்கைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News