செய்திகள்
பாதுகாப்பு பணியில்

அத்துமீறிய தாக்குதலில் 3 பேர் பலி - பாகிஸ்தான் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்

Published On 2020-07-19 14:25 GMT   |   Update On 2020-07-19 14:25 GMT
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாக். தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது
புதுடெல்லி:

கா ஷ்மீர் எல்லையில் அமல்படுத்தப்பட்டு உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு நேற்று முன்தினமும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

எல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத்தூதர் சையது ஹைதர் ஷாவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பி வரவழைத்தது. பின்னர் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் நடத்துவதற்கும் இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கா ஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் 2711 முறை நடந்த பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் 94 பேர் காயமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News