செய்திகள்
மம்தா பானர்ஜி

கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழக்கும் நபரின் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை - மம்தா பானர்ஜி

Published On 2020-07-15 13:20 GMT   |   Update On 2020-07-15 13:20 GMT
கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்காள முதல் மந்தரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், தனித்துவ நடவடிக்கையாக முதல் மந்தரி மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியிட்டார்.  இதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த கிளப்பில், கொரோனா பாதித்து அதில் இருந்து விடுபட்டோர், அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.  இதன்படி, முதற்கட்டமாக 60 பேர் அதில் இணைந்துள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.

அவர்களுக்கு உணவு, தங்குமிடத்திற்கான செலவையும்  அரசு ஏற்றது.  இதுபோன்ற கிளப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  இதேபோன்று, கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு மனநல ஆலோசனை கூட்டங்களையும் மேற்கு வங்காள அரசு நடத்துகிறது.

தொடர்ந்து பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வரும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  இதன்படி, கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News