செய்திகள்
கோப்புபடம்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் - 68 வயது மூதாட்டியை தாக்கிய கணவர்

Published On 2020-07-10 06:34 GMT   |   Update On 2020-07-10 06:49 GMT
பெங்களூருவில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு 68 வயது மூதாட்டியை முன்னாள் அரசு ஊழியர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:

பெங்களூரு ஜெயநகரில் ஒரு வயதான தம்பதி வசித்து வருகின்றனர். அந்த முதியவருக்கு 75 வயதாகிறது. மூதாட்டிக்கு 68 வயதாகிறது. முதியவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இந்த தம்பதியின் வீட்டின் முதல் மாடியில் 35 வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். 

அந்த வாலிபரின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், மூதாட்டிக்கு அந்த வாலிபர் வீட்டு வேலை செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.

கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாததாலும், வயதாகி விட்டதாலும் வீட்டில் உள்ள வேலைகளை மூதாட்டிக்காக வாலிபர் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவிக்கும் அந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று முதியவர் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. 

பின்னர் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை முதியவர் அடித்து, உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு மூதாட்டி புகார் அளித்துள்ளார். அதாவது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் வாலிபரை தனது மகன் போல நினைத்து பழகியதாகவும், ஆனால் அவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தனது கணவர் தன்னை அடித்து, உதைத்து தாக்கிவிட்டதாகவும் அந்த மூதாட்டி கூறி இருந்தார்.


இதுகுறித்து அதிகாரி சரஸ்வதி கூறுகையில், “மூதாட்டி மீது சந்தேகப்பட்டு அவரை அவரது கணவர் தாக்கியுள்ளார். ஆனால் மூதாட்டி அந்த வாலிபரை தனது மகன் போன்றவர் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதியவருக்கு தவறான புரிந்துணர்வு ஏற்பட்டு இருக்கலாம்,“ என்றார்.

Tags:    

Similar News