செய்திகள்
கோப்பு படம்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

Published On 2020-07-09 11:41 GMT   |   Update On 2020-07-09 11:41 GMT
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது.

சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

இதையடுத்து ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின்
மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில், சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஜூலை 11) மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.

அதேபோல் ஜூலை 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  
cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

Tags:    

Similar News