செய்திகள்
பிளாஸ்மா தானம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்கள்

பிளாஸ்மா தானம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்கள்: நாட்டிற்கான மற்றொரு சேவை என பெருமிதம்

Published On 2020-07-05 02:50 GMT   |   Update On 2020-07-05 02:50 GMT
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநலங்களில்தான் அதிக பாதிப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் தானம் செய்ய வேண்டியது அவசியம். சிஆர்பிஎஃப் வீரர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘‘நாங்கள் பிளாஸ் தானம் செய்வதால் பெருமை அடைகிறோம். இது நாட்டிற்கான மற்றொரு சேவை’’ என்றனர்.
Tags:    

Similar News