செய்திகள்
அஸ்திரா ஏவுகணை

ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

Published On 2020-07-02 11:11 GMT   |   Update On 2020-07-02 11:11 GMT
ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.18,148 கோடி மதிப்பிலான 33 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ரஷ்யாவிடம் இருந்து 18,148 கோடி ரூபாய் மதிப்பில் 33 போர் விமானங்களை வாங்கப்பட உள்ளது. இவற்றில் 12 சுகோய் 30 எம்கேஜே ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 எஸ் ரக போர் விமானங்கள் அடங்கும்.

மேலும், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வானிலிருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்டது அஸ்திரா ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News