செய்திகள்
ஏசி

சீனாவின் ஏசி, டிவிக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்

Published On 2020-07-01 11:49 GMT   |   Update On 2020-07-01 11:49 GMT
சீனாவின் ஏசி, டிவி உள்ளிட்ட 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, 'டிவி, ஏர் கண்டிஷனர்' உள்ளிட்ட, 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

குறிப்பாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதன் மூலம், உள்நாட்டில், 1 டஜன் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்த திட்டமிடப்படுகிறது.

மேலும், நியமிக்கப்பட்ட துறைமுகங்களிலிருந்து மட்டுமே, குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்குவது மற்றும் அனுமதிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து, சில மாதங்களுக்கு முன்பே சில நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அகர்பத்தி, டயர், பாமாயில் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. இறக்குமதியை குறைப்பதற்கு ஏதுவாக, உள்நாட்டு பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சுங்க வரியை அதிகரிப்பது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, குறிப்பிட்ட பொருட்களை அதற்கு ஒதுக்கப்படும் துறைமுகங்கள் வழியாக மட்டுமே இறக்குமதி செய்வதற்கு உரிமமும் அனுமதியும் வழங்குவது என, பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

ஏர் கண்டிஷனர், 'டிவி' மட்டுமின்றி, உருக்கு, அலுமினியம், காலணிகள், விளையாட்டு பொருட்கள், லித்தியம் அயான் பேட்டரிகள், விளையாட்டு பொருட்கள் என பல்வேறு பொருட்கள், வர்த்தகம் மற்றும் தொழில் துறையினரால் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கான இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கச் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில், 'அசெம்பிள்' செய்யப்படும் ஏர் கண்டிஷனரில் பயன்படுத்தப்படும், 'கம்பரஸர்'களில், 90 சதவீதம், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News