செய்திகள்
திருமண ஜோடி வழங்கிய படுக்கைகள்

கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகளை வழங்கிய திருமண ஜோடி

Published On 2020-06-24 07:48 GMT   |   Update On 2020-06-24 08:55 GMT
மகாராஷ்டிராவில் திருமண ஜோடி, தனிமைப்படுத்தல் முகாமிற்கு 50 படுக்கைகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வழங்கியுள்ளனர்.
மும்பை:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர் பாரம்பரியமான நண்பரை சந்தித்தால் கை குலுக்குதல் மற்றும் கட்டியணைத்தல் போன்ற செயல்கள் இப்போது மக்களிடம் குறைந்துள்ளது. மேலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் போன்ற பழக்கங்களும் அதிகரித்துள்ளது.

இதேபோல் திருமண நிகழ்ச்சிகளிலும் கொரோனா ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு சுமார் 100 பேர் முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. ஆனால் இப்போது அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டுமே திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். எளிமையாக திருமணம் நடைபெறுவதால் திருமணத்திற்கு ஆகும் செலவு தொகையை திருமண ஜோடிகள் பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் திருமண ஜோடி, தனிமைப்படுத்தல் முகாமிற்கு 50 படுக்கைகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வழங்கியுள்ளனர்.



மும்பையைச் சேர்ந்த எரிக் - மெர்லின் ஜோடி திருமணத்தை முடித்த கையோடு நேரடியாக சென்று படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கினர்.

இரண்டாயிரம் பேர் பங்கேற்போடு நடக்கவிருந்த இவர்களின் திருமணம், கொரோனா அச்சம் காரணமாக வெறும் 22 பேர் வருகையோடு நடைபெற்றது.

திருமணச் செலவு சிக்கனமானதால், அந்த தொகையை பயனுள்ளதாக செலவழித்த இந்த ஜோடி, ஊரகப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு படுக்கைகளை வழங்கியது.
Tags:    

Similar News