செய்திகள்
ராஜ்நாத் சிங்

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ர‌ஷியாவில் சுற்றுப்பயணம்

Published On 2020-06-21 14:16 GMT   |   Update On 2020-06-21 14:16 GMT
ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ர‌ஷியா செல்கிறார்.
புதுடெல்லி:

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை சோவியத் ர‌ஷியா வென்றதன் 75-வது நினைவு தினத்தை ர‌ஷியா சிறப்பாக கொண்டாடுகிறது. இதையொட்டி பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு ஒன்றை மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த அணிவகுப்பு தள்ளி வைக்கப்பட்டது.

ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் 24-ந்தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ர‌ஷியா செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் 2-ம் உலகப்போர் வெற்றி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே மாஸ்கோவில் நடைபெறும் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முப்படைகளில் இருந்து 75 வீரர்களை கொண்ட குழு ஒன்று ஏற்கனவே ர‌ஷியா சென்று உள்ளது. இந்த குழுவினர் சீன பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 11 நாடுகளின் வீரர்களுடன் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
Tags:    

Similar News