செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே மனு தாக்கல்

Published On 2020-06-09 03:46 GMT   |   Update On 2020-06-09 03:46 GMT
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கேநேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் காலியாகும் 4 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெங்களூரு விதான சவுதாவில் உள்ள சட்டசபை செயலாளரான தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் மல்லிகார்ஜுன கார்கே மனு தாக்கல் செய்தார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எம்.எல்.ஏ.க்கள் சாமனூர் சிவசங்கரப்பா, ஆர்.வி.தேஷ்பாண்டே எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் காங்கிரசின் அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கப்பட்டது. மேலும் அந்த மனுவில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து இட்டனர். மல்லிகார்ஜுன கார்கே மொத்தம் 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

முதல் முறை மனு தாக்கல் செய்தபோது, உடன் இருந்த தலைவர்களை தவிர 2-வது முறை மனு தாக்கல் செய்தபோது, எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ்குமார், பரமேஸ்வர், எச்.கே.பட்டீல், தினேஷ் குண்டுராவ், 3-வது மனு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி, முன்னாள் மந்திரி யு.டி.காதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெறுவது உறுதி. அவரது வெற்றிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதன் மூலம் மல்லிகார்ஜுன கார்கே, முதல் முறையாக மாநிலங்களவையில் நுழைகிறார்.
Tags:    

Similar News