செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

Published On 2020-06-05 11:12 GMT   |   Update On 2020-06-05 11:12 GMT
அனைத்து மாநிலங்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒவ்வொரு மாநில அரசு சார்பில் வக்கீல்கள் ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது, 21.69 லட்சம் தொழிலாளர்களை உத்தர பிரதேசம் அழைத்து வந்துள்ளோம் என அம்மாநில அரசு தெரிவித்தது.

20.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என குஜராத் அரசு தெரிவித்தது.

11 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என மகாராஷ்டிர அரசு தெரிவித்தது.

ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

3.97 புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர்  என மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது

28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாருக்கு திரும்பியுள்ளனர் என பீகார் அரசு தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளின் தகவலையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Tags:    

Similar News