செய்திகள்
மத்திய அமைச்சர் ஜவடேகர்

ஒரே தேசம் ஒரே சந்தை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2020-06-03 12:43 GMT   |   Update On 2020-06-03 13:23 GMT
ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், ‘‘முதலீடுகளை அதிகரித்து அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றார். நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், உற்பத்தியைப் பெருக்க வழிகாட்டுதல்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்துக் கொள்ளலாம்’’ என குறிப்பிட்டார்.

மேலும், விவசாயிகள் தங்கள் வேளாண் உற்பத்திப் பொருட்களை மாநிலங்களுக்கிடையே தடையின்றி விற்பதற்கு, பொதுச் சட்டம்

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து சில எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை நீக்கம்

கொல்கத்தா துறைமுக கழகத்தை 'ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கழகம்' என பெயர் மாற்றம் ஆகியவற்றிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Tags:    

Similar News