செய்திகள்
கோப்பு படம்

நாடு முழுவதும் மே 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு- மத்திய உள்துறை அமைச்சகம்

Published On 2020-05-17 13:58 GMT   |   Update On 2020-05-17 13:58 GMT
மே 31-ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இன்று நள்ளிரவு 12 மணியுடன் 3 ஆம் கட்ட பொதுமுடக்கம் முடியும் நிலையில் மேலும் மே 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவையை தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் செயல்பட விதித்த தடை மே 31ந்தேதி வரை தொடரும். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு 50 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை நிர்ணயம் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News