செய்திகள்
அமித்ஷா

அமித்ஷாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய 4 பேர் கைது

Published On 2020-05-09 12:28 GMT   |   Update On 2020-05-09 12:28 GMT
உள்துறை மந்திரி அமித்ஷாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காந்தி நகர்:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியான செய்தி போன்று ஸ்கீரின் சாட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. 

அந்த ஸ்கீரின் சாட்டில், தனக்கு எலுப்பு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நாட்டிற்கு சேவை செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தனது உடல்நலம் சீரடைய மக்கள் பிரார்த்தனை செய்யும் படியும் டிவிட்டர் ஸ்கீர் சாட்டில் எழுதப்பட்டிருந்தது.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், நாட்டின் பல்வேறு தரப்பினரும் இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 



இதற்கிடையில், தனக்கு நோய் பரவியுள்ளதாகவும், உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் சமூகவலைதளத்தில் பரவி வந்த செய்திக்கு உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,   

''எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என பரவி வரும் தகவல் போலியான ஒன்று ஆகும். நான் எந்த வித நோயாளும் பாதிக்கப்படவில்லை, பூரண உடல்நலத்துடன் இருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமித்ஷாவின் பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான டுவிட்டை போன்று போலியான ஸ்கீரின் சாட்டை சமூகவலைதளத்தில் பரவ விட்ட 4 பேரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் இந்த போலி டுவிட் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News