செய்திகள்
பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்

24 மணி நேரத்தில் 778 பேருக்கு பாதிப்பு- மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா

Published On 2020-04-24 08:43 GMT   |   Update On 2020-04-24 08:43 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

இந்தியாவில் 23,077  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1684 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது. 4749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு 6430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 778 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 283 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் கொரோனா பரவும் வேகம் இதே நிலையில் நீடிக்கும்பட்சத்தில், மே மாத இறுதியில் சுமார் 70 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 3000 படுக்கைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News