செய்திகள்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On 2020-04-09 14:52 GMT   |   Update On 2020-04-09 14:52 GMT
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார்.
புதுடெல்லி:

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகளின் கையில் பணம் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை. ஏழைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். கூலியோ அல்லது வேறு வருமானமோ இல்லாமல் தவிக்கும் அவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு அரசு உடனடியாக பணம் வழங்கவேண்டும்.

ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துவதை வரவேற்கிறேன். அதேசமயம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதையும், விகிதாச்சார அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையில் அரசு கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News