செய்திகள்
மகனின் இறுதிச் சடங்கை நடத்த முடியாமல் போன தந்தையின் சோகம்9

மகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்க்க நேர்ந்த சோகமான நிகழ்வு...

Published On 2020-04-07 16:43 GMT   |   Update On 2020-04-07 16:43 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத காரணத்தால் வீடியோ மூலம் இறுதிச் சடங்கை பார்ப்பதற்கு ஆளான தந்தை.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் அர்ஜுன் பராய்க். 21 வயதான இவர் கோவாவில் வேலை செய்து வந்தார். கடந்த நில நாட்களாக அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.

தற்போது ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் அவரால் சொந்த மாநிலம் திரும்பமுடியவில்லை. நோய் தாக்கம் அதிகரிக்க கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அர்ஜுன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவாவில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள குக்கிராமத்திற்கு உடலை கொண்டு வர முடியாததால் அங்கேயே இறுதிச் சடங்கை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் அர்ஜுனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது அர்ஜுன் நண்பர் அங்கு இருந்ததால் அவர் லைவ் வீடியோ மூலம் அர்ஜுனின் குடும்பத்திற்கு இறுதிச் சடங்கை காண்பித்தார்.

அர்ஜுனின் குடும்பம் வீடியோ மூலம் தனது மகனின் முகத்தை கடைசியாக பார்த்தனர். அவர்களது பாரம்பரிய முறைப்படி அர்ஜுனின் ஆடைகளை கல்லறை தோட்டத்தில் புதைத்தனர்.

அர்ஜுனின் தந்தை இதுகுறித்து சோகத்துடன் கூறுகையில் ‘‘என்னுடைய சோகத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. லாக்டவுனால் என்னுடைய மகனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர முடியவில்லை. அவனது நண்பன் இறுதிச் சடங்கை போன் மூலம் காண்பித்தான்.’’ என்றார்.

‘‘அர்ஜுன் முதலில் குஜராத்திற்கு வேலைக்காக சென்றான். அங்கு வேலை பிடிக்காததால் கோவாவில் உள்ள ஓட்டலில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வேலையில் சேர்ந்தார்’’ என அவனது உறவினர் தெரிவித்தார்.
Tags:    

Similar News