செய்திகள்
விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றிய தலைவர்கள்

அமித் ஷா, தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், நடிகர் ரஜினி விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றினர்

Published On 2020-04-05 16:12 GMT   |   Update On 2020-04-05 16:12 GMT
பிரதமர் வேண்டுகோளை ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர் ரஜினி காந்த் தங்களது வீட்டில் விளக்குகள் ஏற்றினர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10-வது நாளான கடந்த 3-ந்தேதி (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அப்போது, ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு (இன்றிரவு 9 மணிக்கு) விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர். சிலர் பட்டாசுகள் வெடித்து ஒற்றுமையாக கொரோனாவை எதிர்கொள்வோம் என்பதை வெளிப்படுத்தினர்.



உள்துறை மந்திரி அமித் ஷா அவரது வீட்டில் விளக்குகள் ஏற்றினார். அதைப்போல் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரது வீட்டில் விளக்குகள் ஏற்றினார். நடிகர் ரஜினி காந்த் அவரது வீட்டின் வாசலில் மெழுகுவர்த்தியை ஏந்தி நின்றார்.
Tags:    

Similar News