செய்திகள்
கொரோனா வைரஸ்

வெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா தொற்று

Published On 2020-03-29 09:18 GMT   |   Update On 2020-03-29 09:18 GMT
சென்னையில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமைானத்தை ஓட்டிச் சென்ற விமானிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்ட பின்னரும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேவைகளை தொடர்ந்து இயக்கி வந்தது.

கடந்த 22-ந்தேதிதான் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. மார்ச் 15-ந்தேதிக்குப்பின் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். உள்நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்றவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சம் நிலவி வந்தது, இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை இயக்கிய விமானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததுள்ளது.

அவர் மார்ச் மாதம் 1-ந்தேதியில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் எதையும் இயக்கவில்லையாம். இறுதியாக கடந்த 21-ந்தேதி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தை இயக்கியுள்ளார். இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ததில் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News