செய்திகள்
கொரோனா வைரஸ்

தெலுங்கானாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Published On 2020-03-28 15:07 GMT   |   Update On 2020-03-28 15:07 GMT
தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.
ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தெலுங்கானாவில் 65 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News