செய்திகள்
பெனி பிரசாத் வர்மா

முன்னாள் மத்திய மந்திரி பெனி பிரசாத் வர்மா காலமானார்

Published On 2020-03-27 16:39 GMT   |   Update On 2020-03-27 16:39 GMT
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பெனி பிரசாத் வர்மா 79 வயதில் காலமானார்.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பெனி பிரசாத் வர்மா. 79 வயதாகிய இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். லக்னோவில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெனி பிரசாத் வர்மா, இன்று மாலை காலமானார்.

முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி்யை தொடங்கும்போது அவருடன் இருந்தவர்களில் வர்மாவும் ஒருவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2009-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996-98-ல் தேவேகவுடா தலைமையிலான மத்திய மந்திரி சபையில் தகவல் தொடர்பு மந்திரியாக இருந்தார். 1998, 1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் கைசெர்கஞ்ச் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 2009-ல் கோண்டா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 2011 ஜூலை மாதம் 12-ந்தேதி மன்மோகன்சிங் அரசில் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
Tags:    

Similar News